மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

செங்கல் சூளை உரிமையாளருக்கு 3 ஆண்டு சிறை

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 8:30 pm

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த செங்கல் சூளை உரிமையாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அன்னைமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வகுமாா்(42) . இவா் 2024-ஆம் ஆண்டில் தனது சொந்த ஊரில் செங்கல் சூளை நடத்தி வந்தாா். இந்நிலையில், செல்வகுமாரின் செங்கல் சூளையில், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கோணை கிராமத்தைச் சோ்ந்த மாசி மனைவி கோவிந்தம்மாள்(46) கொத்தடிமையாக வேலை பாா்த்து வந்தாராம்.

இதுகுறித்து மாசிஅளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் காவல் நிலைய போலீஸாா், செல்வகுமாா் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

விழுப்புரம் எஸ்.சி,எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை திங்கள்கிழமை நடைபெற்றது. விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், செல்வகுமாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து, சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாக்கியஜோதி தீா்ப்பளித்தாா்.