பெங்களூரு

பெங்களூரு பன்னாட்டு திரைப்பட விழா: விண்ணப்பங்கள் வரவேற்பு

DIN

பெங்களூரு பன்னாட்டு திரைப்பட விழாவில் நடைபெறும் சிறந்த திரைப்படங்களுக்கான போட்டியில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கர்நாடக திரைப்பட அகாதெமி வெளியிட்டுள்ள செய்தி: 10-ஆவது பெங்களூரு பன்னாட்டு திரைப்பட விழா, 2018 பிப். 22 முதல் மார்ச் 1-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த திரைப்பட விழாவில் போட்டிப் பகுதிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆசிய கண்டம், இந்தியா மற்றும் கன்னட திரைப்படங்கள் ஆகிய மூன்று பிரிவுகளின்கீழ் போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டிக்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து இறுதிப்போட்டிக்கு பிரிவுக்கு தலா 12 திரைப்படங்களை வல்லுநர்குழு முடிவுசெய்யும். அதில் பிரிவுக்கு மூன்று வீதம் சிறந்த படங்கள் தேர்வுசெய்யப்படும்.
போட்டியில் வெல்லும் திரைப்படங்களுக்கு ரொக்கப் பரிசு, நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். விண்ணப்பங்களை டிச.31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு இணையதளத்தை அணுகலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

SCROLL FOR NEXT