பெங்களூரு

ஜூலை 30 வரை மங்களூரில் 144 தடையுத்தரவு அமல்

தினமணி

மங்களூரில் ஜூலை 30-ஆம் தேதி வரை 144 தடையுத்தரவு விரிவாக்கப்பட்டுள்ளது.
 தென்கன்னட மாவட்டம், மங்களூரில் அண்மையில் எஸ்டிபிஐ தலைவர் அúஷ்ரப், ஆர்எஸ்எஸ் தொண்டர் சரத்மடிவாலா ஆகியோர் கொலை செய்யப்பட்டதால் மதக்கலவரம் வெடித்தது. இதைத் தொடர்ந்து, கடந்த ஒரு வார காலமாக 144 தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இன்னும் நிலைமை கட்டுக்குள் வராததால், ஜூலை 16}ஆம் தேதி காலை 6 மணி முதல் ஜூலை 30}ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 144 தடையுத்தரவு விரிவாக்கப்பட்டுள்ளது. கர்நாடக காவல் சட்டப்பிரிவு 35}இன்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மங்களூரு மாநகர காவல் ஆணையர் டி.ஆர்.சுரேஷ் தெரிவித்தார். இந்த காலக்கட்டத்தில் மங்களூரில் கூட்டம், போராட்டம் எதுவும் நடத்தக் கூடாது. கூட்டமாக மக்கள் திரளக் கூடாது என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

SCROLL FOR NEXT