பெங்களூரு

"நமது உணவகம்' திட்டத்துக்கு இந்திரா காந்தி பெயரைச் சூட்ட வேண்டும்: கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்

தினமணி

பெங்களூரில் தொடங்கப்படும் "நமது உணவகம்' திட்டத்துக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.

பெங்களூரு விதான செüதாவில் புதன்கிழமை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ், வருவாய்த் துறை அமைச்சர் காகோடு திம்மப்பா, பெங்களூரு வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், அங்கன்வாடி ஊழியர்களின் தொடர் தர்னா போராட்டத்தை அரசு கவனத்தில் கொண்டு, அங்கன்வாடி ஊழியர்களின் பிரச்னைக்குத் தீர்வுகாண வேண்டும்.

இதற்குப் பதிலளித்த முதல்வர் சித்தராமையா, அங்கன்வாடி ஊழியர்களின் பிரச்னையைத் தீர்க்க அக்கறை கொண்டுள்ள மாநில அரசு, அவர்களுடன் இதுவரை 2 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

மேலும், ஏப்.19-ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை சுமுகமாக முடிக்க முற்படுவதாகத் தெரிவித்திருந்தேன். ஆனாலும், அவர்கள் போராட்டத்தைத் தொடர்கின்றனர் என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எஸ்.டி.சோமசேகர், முனிரத்னா உள்ளிட்டோர் மாநில பட்ஜெட்டில் அறிவித்தபடி, பெங்களூரு மாநகராட்சியின் 198 வார்டுகளில் தொடங்கப்படவுள்ள நமது உணவகம் திட்டத்துக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரைச் சூட்ட வேண்டும் என்றனர்.

இதற்கு பெரும்பாலான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்ததால், இந்த யோசனையைச் செயல்படுத்துவதாக முதல்வர் சித்தராமையா உறுதி அளித்தார்.

இந்திரா காந்தி உணவகம்
 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் முடிந்ததும் உணவு மற்றும் பொது வழங்கல் துறை அமைச்சர் யூ.டி.காதர், செய்தியாளர்களிடம் கூறியது: இந்திய மக்களுக்கு உணவு, உடை, தொழில் வழங்க வேண்டும் என்று முழக்கமிட்டு அதற்காக 20 அம்சத் திட்டத்தைத் தொடங்கிய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரை நமது உணவகம் திட்டத்துக்கு சூட்டுவது பொருத்தமாக இருக்கும். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் யோசனையை அமல்படுத்த குறித்து அரசு யோசித்து முடிவெடுக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT