பெங்களூரு

"பயிர்க் கடனை திருப்பிச் செலுத்த கால அவகாசம்'

தினமணி

கூட்டுறவு வங்கியில் பெற்ற பயிர்க் கடனை திருப்பிச் செலுத்த மார்ச் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
 கர்நாடக சட்ட மேலவையில் புதன்கிழமை பூஜ்யம் நேரத்தில் பாஜக உறுப்பினர் செüட ரெட்டி தோபல் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து அவர் பேசியது:
 கர்நாடகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனை திரும்ப அடைக்கும் காலத்தை மார்ச் 31-ஆம் தேதிவரை நீட்டிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால் விவசாயிகளின் பயிர்க்கடன் மீதான வட்டித்தொகையை மாநில அரசே ஏற்றுக்கொண்டு, அந்த தொகையை கூட்டுறவுவங்கிகளுக்கு அளிக்கவுள்ளது.
 இந்த நடவடிக்கையால் 74.525 விவசாயிகளின் ரூ.125.27கோடி வட்டித்தொகையை மாநில அரசு தள்ளுபடி செய்துள்ளது. இந்த தொகையை கூட்டுறவுவங்கிகளுக்கு மாநில அரசு வழங்கிவிடும்.
 2015-ஆம் ஆண்டு செப்.30-ஆம் தேதிக்குள் செலுத்தவேண்டிய கடன் தொகை, வட்டி, மேல்வட்டியை திரும்ப அடைக்கும் காலக்கெடுவை 2016 செப்.30-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. ஆனால் கர்நாடகத்தில் தொடர்ந்து வறட்சியான சூழல் நிலவுவதால், விவசாயிகள் கடன் தொகையை அடைக்கும் காலத்தை 2017 மார்ச் 31-ஆம் தேதிவரை நீட்டிக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
 விவசாயிகளின் பயிர்க்கடனை அடைக்கும் காலக்கெடுவை நீட்டித்துள்ளதால், பயிர்க்கடனை தள்ளுபடி செய்யும் திட்டம் அரசிடம் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம். விவசாயிகளின் தற்கொலை சம்பவங்கள் கவலை அளிப்பதாக இருக்கிறது. இதை லேசாக எடுத்துக்கொள்ளாமல், விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 2015-16-ஆம் நிதியாண்டில் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு செலுத்தவேண்டிய நீண்டகால, குறுகியகால கடன் தொகையை திரும்ப அடைக்கும் காலக்கெடுவை ஓராண்டுக்கு நீட்டித்திருந்ததால், மாநில அரசுக்கு ரூ.145.8கோடி கூடுதல் செலவானாலும், இந்ததிட்டத்தால் 2 லட்சம் விவசாயிகள் பயன்படுத்தனர். விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்ட அரசாகும்.
 தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்குவதோடு, இலவச சுகாதார வசதிகளும் செய்துதரப்பட்டுள்ளன. மேலும் இறந்த விவசாயியின் மனைவிக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சா கடத்தியவா் கைது

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

காா் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12 லட்சம் மோசடி

பா்கூா் வட்டத்தில் வறட்சியால் மா சாகுபடி பாதிப்பு

தைலாபுரம் உபகார மாதா ஆலயத்தில் அசன விழா

SCROLL FOR NEXT