"ஓவியம் சமூக மாற்றத்திற்கான ஆயுதம்'
ஓவியங்கள் சமூக மாற்றத்திற்கான ஆயுதம் என்றார் ஓவியக் கலைஞரும், பேராசிரியருமான பிரிஞ்சர்நாத் கோஸ்வாமி.
ஓவியங்கள் சமூக மாற்றத்திற்கான ஆயுதம் என்றார் ஓவியக் கலைஞரும், பேராசிரியருமான பிரிஞ்சர்நாத் கோஸ்வாமி.
பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற ஓவியர்களுக்கான கருத்தரங்கில் அவர் பேசியது:
ஓவியம் என்பது ஒரு உன்னதமான கலை. இதில் ஈடுபட்டுள்ள கலைஞர்கள், தங்கள் தொழிலை புனிதமாகக் கருத வேண்டும். நலிந்த மக்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்தும் வகையிலும், பயனடையும் வகையிலும் ஓவியக் கலை இருப்பது அவசியம்.
எழுத்தாளர்கள் சமூகத்திற்கான கருத்துகளை எழுத்துகள் மூலம் தெரிவிப்பத்தை போல, ஓவியர்களும் தங்கள் ஓவியங்கள் மூலம் சமூகத்திற்கான கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். எழுத்தை போலவே ஓவியமும் சமூக மாற்றத்திற்கான ஆயுதம். அதனை சிறப்பான பயன்படுத்திக் கொள்ள வேண்டியது ஓவியக் கலைஞர்களின் கடமை என்றார்.
நிகழ்ச்சியில் மத்திய கலாசாரத் துறை கூடுதல் செயலாளர் சுஜாதா பிரசாத், சத்தியபாமா பத்ரிநாத், மீனாவாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.