மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
வீட்டின் முன் நின்றிருந்த மூதாட்டியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கலியை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்.
வீட்டின் முன் நின்றிருந்த மூதாட்டியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கலியை மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்.
பெங்களூரு சோலதேவனஹள்ளி கெரெகுட்டதள்ளி லேக்வியூ லேஅவுட்டை சேர்ந்த சிக்கலிங்கம்மா (80) செவ்வாய்க்கிழமை வீட்டின் முன் நின்றிருந்தாராம்.
அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், சிக்கலிங்கம்மா கழுத்திலிருந்த ரூ. 1.2 லட்சம் மதிப்புள்ள 40 கிராம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து சோலதேவனஹள்ளி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.