முகப்பு
பெங்களூரு

சிற்பக்கலை நூல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சிற்பக்கலை நூல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெங்களூரு

சிற்பக்கலை நூல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சிற்பக்கலை நூல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

சிற்பக்கலை நூல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கர்நாடக சிற்பக்கலை அகாதெமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கர்நாடக சிற்பக்கலை அகாதெமி சார்பில் சிற்பம் மற்றும் சிற்பக்கலை சார்ந்த சமகால, நாட்டுப்புறவியல் உள்ளிட்ட ஏதாவதொரு வகையிலான சிற்பக்கலை நூலை எழுதியிருந்தால், அதை எழுதிய எழுத்தாளருக்கு ஆண்டுதோறும் சிற்பக்கலை விருது வழங்கி கெளரவிக்கப்படுகிறது.
அதன்படி 2015, 2016,2017-ஆம் ஆண்டுகளுக்கான சிற்பக்கலை நூல் விருதுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெவ்வேறு அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கன்னட சாஹித்ய பரிஷத், கன்னட நூல் ஆணையம், பிற அகாதெமிகள், கன்னடம் மற்றும் பண்பாட்டுத் துறை, அமைப்புகளிடம் இருந்து நன்கொடை பெற்று சொந்தமாக அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனங்களே பதிப்பித்திருக்கும் நூல்கள் விருதுக்கு கருதப்பட மாட்டாது. இதேபோல, மறு பதிப்பு நூல்களுக்கு விருதுக்கு ஏற்கப்படாது. முதல்முறையாக வெளியிடப்படும் நூல் மட்டுமே விருதுக்கு கருதப்படும். சிற்பக்கலை நூல் விருதுடன் ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசு அளிக்கப்படும். 2015-ஆம் ஆண்டுக்கான விருதுக்கு 1.1.2014 முதல் 31.12.2014 வரை, 2016-ஆம் ஆண்டுக்கான விருதுக்கு 1.1.2015 முதல் 31.12.2015வரை, 2017-ஆம் ஆண்டுக்கான விருதுக்கு 1.1.2016 முதல் 31.12.2016 வரை வெளியிடப்பட்ட நூல்களை அனுப்பலாம்.
விருந்தளிக்க பரிசீலனைக்கு நூல்களை அனுப்பும் நூலாசிரியர்கள் 4 படிகளை இலவசமாக கர்நாடக சிற்பக்கலை அகாதெமிக்கு கட்டாயம் அனுப்பி வைக்க வேண்டும். விருதுக்குத் தகுதியான நூல்களை பொதுமக்களும் பரிந்துரைக்கலாம். விண்ணப்பங்களை டிச.10-ஆம் தேதிக்குள் கர்நாடக சிற்பக்கலை அகாதெமியின் தலைமை அலுவலகத்தில் அளிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு 080-22278725 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →