பெங்களூரு

பட்டாசு அங்காடிகள் திறக்க விண்ணப்பிக்கலாம்

DIN

தீபாவளியை முன்னிட்டு பட்டாசு அங்காடிகள் திறக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து பெங்களூரு மாநகரக் காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பெங்களூரு மாநகராட்சி ஆணையர், ஊர்க்காவல் படையின் டைரக்டர் ஜெனரல் மற்றும் கட்டளை அதிகாரி, தீயணைப்புப் படை இயக்குநர் ஆகியோர் பரிசீலித்து பட்டாசு விற்பனைக்கு அனுமதி அளிப்பார்கள்.
பெங்களூரு மாநகராட்சி அதிகாரவரம்புக்குள்பட்ட ஒருசில விளையாட்டுத் திடல்களில் மட்டும் பட்டாசு விற்பதற்காக அங்காடிகள் திறக்க அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த இடங்களில் பட்டாசு அங்காடிகளைத் திறக்க விரும்புவோரிடம் இருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறைவுசெய்த விண்ணப்பங்களை மாநகர உதவி காவல் ஆணையர் அலுவலகம், சிஏஆர் மையம், மைசூரு சாலை, பெஙளூரு-560018 என்ற முகவரியில் அளிக்கலாம். பெங்களூரு மாநகராட்சியின் வேண்டுகோளின்படி, மல்லேஷ்பாளையா முதன்மைச் சாலையில் உள்ள ராஜ்குமார் திறந்தநிலை நாடக மன்றத்தில் பட்டாசு அங்காடி திறக்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT