பெங்களூரு

சுற்றுலாத் துறையை  மேம்படுத்த நடவடிக்கை

DIN

கேரளத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்து அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுற்றுலாத் துறை இணை இயக்குநர் அனில் தெரிவித்தார்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை கேரள மாநில சுற்றுலாத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியது: 
கடவுளின் சொந்த நாடாக கருதப்படும் கேரளா, சுற்றுலாவின் சொர்க்க பூமியாகத் திகழ்கிறது. வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து கேரளத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2017-ஆம் ஆண்டில் இது 20 சதவீதமாக உயர்ந்துள்ளது. 
வெளிமாநிலங்களிலிருந்து கேரளத்துக்கு சுற்றுலா வரும் பயணிகளில் கர்நாடகம் 2-ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு கர்நாடகத்திலிருந்து  9.33 லட்சம் பேர் கேளத்துக்கு சுற்றுலா வந்தனர். நிகழாண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என நம்புகிறோம். இதையடுத்து, சுற்றுலாத் துறையை மேம்படுத்த அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

துளிகள்...

SCROLL FOR NEXT