முகப்பு
பெங்களூரு

கர்நாடகத்தில் தொழில் திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம்: அமைச்சர் பசவராஜ் ராயரெட்டி

கர்நாடகத்தில் தொழில்திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம் தொடங்க ஆலோசித்து வருவதாக அந்த மாநில  உயர் கல்வித் துறை அமைச்சர் பசவராஜ் ராயரெட்டி தெரிவித்தார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

கர்நாடகத்தில் தொழில்திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம் தொடங்க ஆலோசித்து வருவதாக அந்த மாநில  உயர் கல்வித் துறை அமைச்சர் பசவராஜ் ராயரெட்டி தெரிவித்தார்.
கர்நாடக சட்டப்பேரவையில் புதன்கிழமை பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர் பேசியது:
கர்நாடகத்தில் தாண்டேலி, கொப்பள், மைசூரு உள்ளிட்ட இடங்களில் தொழில்திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநில அளவிலான தொழில் திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம் தொடங்கும் யோசனையில் அரசு உள்ளது. மாநிலத்தில் பட்டதாரிகளின் எண்ணிக்கை 28 சதவீதமாக உள்ளது. இதனை 40 சதவீதமாக உயர்த்த அரசு ஆலோசித்து வருகிறது. 
இது தொடர்பாக தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படும். தனியார் பல்கலைக்கழங்கங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பேராசிரியர் புட்டினோ தலைமையில் பல்கலைக்கழக பரிசீலனைக் குழு அமைக்கப்படும். 
அந்த குழு செய்யும் சிபாரிசுகளை ஏற்று, தனியார் பல்கலைக்கழங்கங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். உயர் கல்வியை ஊக்குவிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →