முகப்பு
பெங்களூரு

ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற பணம், கார் பறிமுதல்

உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரொக்கப் பணம், காரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Updated On : 9 ஏப்ரல், 2018 at 7:55 AM
பகிர்:

உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரொக்கப் பணம், காரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
விஜயபுரா மாவட்டத்துக்குள்பட்ட வெளிவட்டச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அலமேலுநகரிலிருந்து விஜயபுராவுக்குச் சென்ற காரை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில்,  உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 60 லட்சம் ரொக்கப் பணம் இருந்தது தெரியவந்தது.  இதையடுத்து,  பணத்தையும், காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.  இதுகுறித்து எபிஎம்சி போலீஸார் விசாரிக்கின்றனர்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.