சூதாட்டம்: 6 பேர் கைது
சூதாட்டத்தில் ஈடுபட்டதாக, 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சூதாட்டத்தில் ஈடுபட்டதாக, 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு எச்.ஏ.எல். ஷான்போக் லேஅவுட் 5-வது குறுக்குச் சாலையில் உள்ள காலி இடத்தில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். தகவலின்பேரில் எச்.ஏ.எல். போலீஸார், சுனில் (28), அக்ஷ்ய் (23), மஞ்சுநாத்ரெட்டி (35), ராஜு (39), சுப்ரமணி (28), விஜய் (22) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ரூ. 1.78 லட்சம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.