பெங்களூரு

சாலை சுற்றுலாவை மேம்படுத்துவது அவசியம்'

DIN

கர்நாடகத்தில் சாலை சுற்றுலாவை மேம்படுத்துவது அவசியம் என்று ரோடுடிரிப்பரஸ் கிளப்பின் உறுப்பினர் தீபக் ஆனந்த் கேட்டுக் கொண்டார்.
பெங்களூரில் வியாழக்கிழமை  செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 
தேசிய அளவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் இடங்கள் அதிக உள்ளன. ஆனால், விமானம் மூலம் செல்லும் சுற்றுலாத்தலங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. இந்த சுற்றுலாத்தலங்களுக்கு ஏழைகள், நடுத்தர மக்கள் செல்லமுடிவதில்லை. எனவே, சாலை சுற்றுலாவை அரசு மேம்படுத்துவதன் மூலம் அனைத்து சுற்றுலாத்தலங்களுக்கு அனைவரும் சென்று வர முடியும். 
எனவே சாலை சுற்றுலாவை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் டிச. 8,9-ஆம் தேதிகளில் பெங்களூரிலிருந்து குடகு மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் காபி தோட்டகளுக்கு சுற்றுலா விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம்
என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

SCROLL FOR NEXT