காதுகேளாதோர், வாய்பேசாதோர் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு
பெங்களூரு இந்திரா நகரில் செயல்பட்டுவரும் அரசு காதுகேளாதோர், வாய்பேசாதோர் பள்ளியில் மாணவர்களை சேர்க்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பெங்களூரு இந்திரா நகரில் செயல்பட்டுவரும் அரசு காதுகேளாதோர், வாய்பேசாதோர் பள்ளியில் மாணவர்களை சேர்க்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கர்நாடக அரசின் மாற்றுத்திறனாளிகள், முதியோர்நலத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் அரசு காதுகேளாதோர், வாய்பேசாதோர் பள்ளியில் 2018-19-ஆம் ஆண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கைக்குவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாணவர்சேர்க்கை இலவசமாக அளிக்கப்படுகிறது. மாணவர்களை சேர்க்கவிரும்புவோர் பள்ளியில் விண்ணப்பங்களை இலவசமாக பெறலாம்.
கூடுதல் விவரங்களுக்கு "32, பழைய பின்னமங்களா, முதல் கட்டம், இந்திராநகர், பெங்களூரு-560038' என்ற முகவரியில் இயங்கும் பள்ளியிலோ அல்லது 9449593830, 9019728336 என்ற தொலைபேசி எண்களில் அணுகலாம் என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.