முகப்பு
பெங்களூரு

கல்வி உரிமைச் சட்டம்:  2.28 லட்சம்  விண்ணப்பங்கள் பதிவேற்றம்

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெற 2,28,788 விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 29 மார்ச், 2018 at 6:47 AM
பகிர்:

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெற 2,28,788 விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2018-19-ஆம் கல்வியாண்டில் கர்நாடகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பெறுவதற்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பிப்.20-ஆம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது.
மார்ச் 28-ஆம் தேதி வரை விண்ணப்பங்களைச் செலுத்த வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பிக்க கடைசி நாளான புதன்கிழமை மாலை 5.30 மணி நிலவரப்படி 2,28,788 விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.