முகப்பு
தற்போதைய செய்திகள்

பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் - புகைப்படங்கள்

மதுரையில், உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், பச்சைப்பட்டு உடுத்தி, பக்தர்களின், கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க, வைகை ஆற்றில் எழுந்தருளினார்.
பகிர்:
பச்சைப்பட்டு உடுத்தி, தங்கக்குதிரை வாகனத்தில், வைகையில் எழுந்தருளிய ஸ்ரீ கள்ளழகர் பெருமானை, அங்கு கூடியிருந்த பக்தர்கள் 'கோவிந்தா' முழக்கத்துடன் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்றனர்.
மதுரை சித்திரை திருவிழாவின் உச்சமாக, வைகை ஆற்றில் எழுந்தருளிய ஸ்ரீ கள்ளழகரை வெள்ளிக் குதிரை வாகனத்தில் வந்து ஸ்ரீ வீரராகவப் பெருமாள் வரவேற்றார். - -
வழிநெடுகிலும், கள்ளழகர் மீது பக்தர்கள் தண்ணீர் பீச்சி அடித்தும், சர்க்கரை தீபம் ஏற்றியும் பக்தர்கள், கள்ளழகரை கண்குளிர தரிசனம் செய்த பக்தர்கள். - -

Advertisement

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளிய போது பக்தர்கள் 'கோவிந்தா கோவிந்தா' என்று பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர். - -
பச்சைப் பட்டு உடுத்தி, தங்கக்குதிரை வாகனத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த கள்ளழகர் பெருமான். - ARUNSS

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.