பெங்களூரு

"தொழில் முதலீட்டிற்கு உகந்த நகரமாக பெங்களூரு விளங்குகிறது'

DIN

தொழில் முதலீடு செய்வதற்கு உகந்த நகரமாக பெங்களுரு விளங்குவதாக ஸ்பார் இந்தியா குழுமத்தின் மேலாண் இயக்குநரும், மூத்த செயல் தலைவருமான ராஜீவ் கிருஷ்ணன்
தெரிவித்தார்.
பெங்களூரு எலஹங்காவில் வெள்ளிக்கிழமை அக்குழுமத்தின் விற்பனைமையத் தொடக்க விழாவில் அவர் பேசியது: இந்திய அளவில் முக்கிய நகரங்களில் எங்கள் குழுமத்தின் சார்பில் அதிக அள்வில் முதலீடுகளைச் செய்து வருகிறோம். தேசிய அளவில் 22-ஆவதாகவும், மாநில அளவில் 7-ஆவதாகவும் எலஹங்காவில் விற்பனை மையத்தைத் தொடங்கியுள்ளோம். இந்தியாவில் முதலீடு செய்பவர்களுக்கு எளிதாக இருக்கும் வகையில் சட்ட விதிகளில் மத்திய அரசு தளர்வு செய்துள்ளதால், இது சாத்தியமாகிறது. கர்நாடக அரசும் முதலீட்டாளர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வருவதாலும், பெங்களூரு உள்பட மாநில அளவில் அதிக அளவில் முதலீடு செய்வதும், தொழில் தொடங்குவதும் அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் முதலீட்டிற்கு உகந்த நகரமாக பெங்களூரு விளங்குகிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

SCROLL FOR NEXT