பெங்களூரு

பெங்களூரில் செப்.21-இல் மின் வாகன கண்காட்சி

DIN

பெங்களூரு ஜெயநகரில் வெள்ளிக்கிழமை (செப்.21) மின் வாகன கண்காட்சி நடைபெறுகிறது. 
இதுகுறித்து மின் வாகன கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் அரோரா செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: 
பிரதமர் நரேந்திர மோடி, மின் வாகன உற்பத்தியை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார். 
அதன்படி, சுற்றுச்சூழலைப் பாதிக்காத மின் வாகன உற்பத்தியில் ஈடுபட பலர் முன்வந்துள்ளனர். அனைவரிடமும் இதற்கான செயல் திட்டத்தை கொண்டு சேர்க்கும் நோக்கில் மின் வாகன கண்காட்சி நடத்தப்படுகிறது.
பெங்களூரு ஜெயநகர் ஷாலினி திடலில் செப். 21-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறும் கண்காட்சியை மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி தொடக்கிவைக்கிறார். 
3 நாள்கள் நடைபெறும் கண்காட்சியில் மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் ஆனந்த்கீதே சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். 
கண்காட்சியில் சர்வதேச நிறுவனங்கள், இந்திய நிறுவனங்கள் உருவாக்கியுள்ள 2, 3 சக்கர மின் வாகனங்கள் இடம் பெறும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT