பெங்களூரு

கன்னட மொழிப் பயிற்சிக்கு தனி இணையதளம்

DIN

கன்னடம் தெரியாதவர்களுக்கு கன்னட மொழிப் பயிற்சி அளிக்க தனி இணையதளத்தை கன்னடம் மற்றும் கலாசாரத் துறை வடிவமைத்துள்ளது.
இதுகுறித்து கன்னடம் மற்றும் கலாசாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கர்நாடக அரசில் பணியாற்றிவரும் கன்னடம் தெரியாத ஊழியர்கள் மற்றும் ஆர்வமுள்ள பொதுமக்களுக்காக ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் செயல்படும் கன்னட ஆய்விருக்கையின் துணையுடன் கன்னடம் மற்றும் கலாசாரத் துறையின் சார்பில் புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சியில் கன்னடம் தெரியாத பொதுமக்கள் தவிர கர்நாடக அரசு வாரியங்கள், கழகங்கள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், கல்விநிலையங்கள், அமைப்புகளின் ஊழியர்கள் சேர்ந்து படிக்கலாம். 18-50 வயதுக்குட்பட்டோர், எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றோர் இந்த பயிற்சியில் சேரலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குக் வித் கோமாளிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT