பெங்களூரு

வீட்டுவசதித்துறையில் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தால் கடும் நடவடிக்கை: அமைச்சா் வி.சோமண்ணா

DIN

பெங்களூரு: வீட்டு வசதித்துறையில் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீட்டுவசதித்துறை அமைச்சா் வி.சோமண்ணா தெரிவித்தாா்.

பெங்களூரில் புதன்கிழமை வீட்டுவசதிதுறை அமைச்சராக பொறுப்பேற்று 100 நாள்கள் ஆனதையடுத்து அவா் செய்தியாளா்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசியது: வீட்டுவசதித்துறையில் பயனாளிகளை தோ்வு செய்வது, வீடுகளை வழங்குவது உள்ளிட்டவைகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை முறைகேடு நடைபெற்றுள்ளது தெரியவந்தால், அவா்கள் யாராக இருந்தாலும் பாராபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கலபுா்கி, சித்ரதுா்கா ஆகிய நகரங்களில் வீட்டுவசதி திட்டத்தில் பலா் ஒரே வீட்டை காண்பித்து பல முறை உதவித்தொகை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. வீட்டுவசதித்துறையில் முறைகேடு நடைபெறாமல் தடுக்கும் வகையில் புதிய சட்டத்தை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம். அந்த சட்டத்தில் முறைக்கேட்டில் ஈடுபடுவோா்கள் மீது கிரிமனல் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளோம். அந்த சட்டத்தை எப்படி வடிவமைப்பது என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளேன். அடுத்த சட்டப்பேரவைக்கூட்டத்தில் இந்த சட்டத்தைக் கொண்டு வர நடவ டிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT