பெங்களூரு

இன்று குடிநீர் குறைதீர் முகாம்

DIN

பெங்களூரில் பிப்.18-ஆம் தேதி குடிநீர் குறைதீர் முகாம் நடக்கவிருக்கிறது.
இது குறித்து பெங்களூரு குடிநீர் வழங்கல் கழிவுநீர் அகற்றல் வாரியம்(பிடபிள்யூஎஸ்எஸ்பி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  பெங்களூரு குடிநீர் வழங்கல் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் சார்பில் குடிநீர் வழங்கல்,  கழிவுநீர் இணைப்பு தொடர்பான குறைகளைத் தீர்த்துவைக்க குறைதீர்முகாம்களை நடத்திவருகிறது.  பெங்களூரு, பிடிஎம் லேஅவுட்டில் உள்ள வாரியத்தின் உதவி செயல் பொறியாளர் அலுவலகத்தில்(9-ஆவது பிரதானசாலை) பிப்.18-ஆம் தேதி காலை 9.30மணி முதல் காலை 11 மணி வரை குடிநீர் குறைதீர்முகாம் நடத்தப்படுகிறது.  இதில் தெற்கு-3  நீரேற்று மையத்திற்குட்பட்ட  பிடிஎம் லேஅவுட் பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டு குறைகளுக்கு தீர்வு கண்டுகொள்ளலாம்.  மேலும்,  விவரங்களுக்கு 080-22238888, 8762228888 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT