பெங்களூரு

இன்றைய ரயில் சேவைகளில் மாற்றம்இன்றைய ரயில் சேவைகளில் மாற்றம்

DIN


இருப்புப் பாதை சீரமைப்புப் பணி நடைபெறுவதால், ஞாயிற்றுக்கிழமை ஒருசில ரயில்சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இருப்புப் பாதை சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால், ஜன. 13-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஒருசில ரயில்களின் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ரயில் எண்: 56262-பெங்களூரு-அரக்கோணம் பயணிகள் ரயில் பெங்களூரு-கிருஷ்ணராஜபுரம் இடையே ரத்துசெய்யப்படுகிறது. அதன்படி, இந்த ரயில் கிருஷ்ணராஜபுரம் ரயில்நிலையத்தில் இருந்து புறப்படும்.
ரயில் எண்: 17209-பெங்களூரு-காகிநாடா சேஷாத்ரி விரைவுரயில் ஜன.13-ஆம் தேதி பெங்களூரு ரயில்நிலையத்தில் இருந்து காலை 11 மணிக்கு பதிலாக ஒரு மணி நேரம் தாமதமாக நண்பகல் 12 மணிக்கு புறப்படுகிறது. ரயில் எண்: 12246-யஷ்வந்த்பூர்-ஹெளரா துரந்தோ விரைவுரயில் பானசவாடி ரயில்நிலையத்தில் 50 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது.
ரயில் எண்: 12691/12692 சென்னை-சத்யசாய் பிரஷாந்தி நிலையம்-சென்னை வரையிலான விரைவு ரயில்கள், பெங்களூரு மற்றும் ஸ்ரீசத்யசாய் பிரசாந்தி நிலையம் வரையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டு, ஜன.18-ஆம் தேதி முதல் வழக்கம்போல இயக்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மம்தாவின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மயங்கி விழுந்த நபரால் பரபரப்பு

மாலிவாலை இழிவுபடுத்தவே திருத்தப்பட்ட விடியோக்களை ஆம் ஆத்மி பரப்பி வருகிறது: பாஜக

அயலக தமிழர்கள் பதிவு- தமிழக அரசு அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

SCROLL FOR NEXT