பெங்களூரு

லஞ்சம்: கிராமப் பஞ்சாயத்து கணக்காளர் கைது

DIN

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க லஞ்சம் பெற்ற கிராம பஞ்சாயத்து கணக்காளரை ஊழல் ஒழிப்பு படையினர் கைது செய்தனர்.
பல்லாரி மாவட்டம், ஜாலபென்சே கிராமத்தை சேர்ந்தவர், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட 8 பேருக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 7.8 லட்சம் நிவாரணத் தொகையை வழங்குமாறு, ஜாலபென்சே கிராம பஞ்சாயத்து கணக்காளர் ஸ்ரீதரை அணுகியுள்ளார்.  நிவாரணத் தொகையை வழங்க ரூ. 50 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என அவர் கேட்டுள்ளார். 
இதையடுத்து புதன்கிழமை ஸ்ரீதரிடம் முதல் தவணையாக ரூ. 10 ஆயிரத்தை லஞ்சமாக வழங்கிய போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு படையினர், ஸ்ரீதரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஸ்ரீதரிடம் பல்லாரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு படையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லாலு பிரசாத் மகளுக்கு எதிராக லாலு பிரசாத் போட்டி?

நெல்சன் தயாரிப்பில் முதல் படம் யாருடன்?

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

SCROLL FOR NEXT