பெங்களூரு

கஞ்சா விற்றதாக 3 பேர் கைது

DIN

கஞ்சா விற்றதாக 3 பேரை கைது செய்த போலீஸார், 10 கிலோ 480 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் திவாகர் (21), ஸ்ரீராம் (19) . இவர்கள் இருவரும் பெங்களூரு நந்தினிலேஅவுட் பகுதியில் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தனராம். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், 2 பேரையும் கைது செய்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் நந்தினி லேஅவுட் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். 
மற்றொரு சம்பவம்: வெளிநாட்டைச் சேர்ந்தவர் அகமது மூசா (26). இவர் பெங்களூரு சோலதேவனஹள்ளி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே போதைப்பொருள் கஞ்சா விற்பனை செய்து வந்தாராம். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், அங்கு சென்று கஞ்சாவை விற்பனை செய்த அகமது மூசாவைக் கைது செய்தனர். அவரிடமிருந்து 480 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சோலதேவனஹள்ளி போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டெஸ்லாவில் இரு உயர் அலுவலர்கள் டிஸ்மிஸ்! நூற்றுக்கணக்கானோர் நீக்கம்?

SCROLL FOR NEXT