பெங்களூரு

திருட்டு வழக்குகளில் 4 பேர் கைது

DIN

பல்வேறு திருட்டு வழக்குகளில் 4 பேரை கைது செய்த போலீஸார், ரூ. 3.30 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
ஹாசனைச் சேர்ந்த கணேஷ் (39), திப்டூரைச் சேர்ந்த குமார் (30), பெங்களூரு கெங்கேரியைச் சேர்ந்த ரியாஸ்ஹனீப் (33) ஆகியோர் சேஷாத்ரிபுரம் ஜக்கராயனா ஏரி பகுதியில் வசித்து வரும் ஆறுமுகம் என்பவரது வீட்டில் நவ. 6-ஆம் தேதி புகுந்து தங்க நகையை திருடிச் சென்றனர். இதுகுறித்து வழக்குப் பதிந்த ஸ்ரீராமபுரம் போலீஸார், 3 பேரையும் கைது செய்து, ரூ. 1.80 லட்சம் மதிப்புள்ள 60 கிராம் தங்கநகையை பறிமுதல் செய்தனர். இதேபோல பெங்களூரு நந்தினிலேஅவுட்டில் வசித்து வரும் ஜெயம்மா என்பவரது வீட்டில் ஜன. 15-ஆம் தேதி புகுந்து தங்கநகையை திருடிச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த அல்டாப் சையத் அப்துல்லா (30) என்பவரை கைது செய்த நந்தினி லேஅவுட் போலீஸார், ரூ. 1.50 லட்சம் மதிப்புள்ள 42 கிராம் தங்கநகையை பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

SCROLL FOR NEXT