பெங்களூரு

கள்ள ரூபாய் நோட்டுதயாரித்து, விநியோகம்: கேமரூன் நாட்டைச் சேர்ந்தவர் கைது

DIN


 கள்ள ரூபாய் நோட்டு தயாரித்து, விநியோகம் செய்த கேமரூன் நாட்டைச் சேர்ந்தவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கேமரூன் நாட்டைச் சேர்ந்தவர் டியோடனே கிரிஸ்போல் (35).  இவர் பெங்களூரு பானஸ்வாடி சுப்பையனபாளையா சஞ்சீவ்ரெட்டி சாலையில் வசித்து வந்தாராம்.  கிரிஸ்போல் தனது வீட்டில் உள்ள வண்ண அச்சு இயந்திரத்தின் உதவியில், ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை நகல் எடுத்து,  பொதுமக்களிடம் விநியோகம் செய்து வந்தாராம்.  
இது குறித்து தகவல் அறிந்த போலீஸார், அங்கு சென்று, டியோடனே கிரிஸ்போலைக் கைது செய்து, ரூ. 2 ஆயிரம் முகமதிப்புள்ள ரூ. 33.70 லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகள்,  2 அச்சு இயந்திரங்கள், வெள்ளை காகிதங்கள், செல்லிடப்பேசி, கடவுச்சீட்டைப் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப் பதிந்த பானஸ்வாடி போலீஸார், கைது செய்யப்பட்ட டியோடனே கிரிஸ்போலிடம் மேலும்விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

SCROLL FOR NEXT