பெங்களூரு

ஜிந்தால் குழுமத்துக்கு நிலம் விநியோகிக்கும் முடிவு மறுபரிசீலனை: முன்னாள் அமைச்சர் எச்.கே.பாட்டீல் வரவேற்பு

DIN

பெல்லாரி மாவட்டத்தில் ஜிந்தால் குழுமத்துக்கு நிலத்தை வழங்குவது குறித்த முடிவை மறு பரிசீலனை செய்வதாக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளது வரவேற்கத்தக்கது என்று முன்னாள் அமைச்சர் எச்.கே.பாட்டீல் தெரிவித்தார்.
இதுகுறித்து புதன்கிழமை சுட்டுரை பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, பெல்லாரி மாவட்டத்தில் ஜிந்தால் குழுமத்துக்கு நிலத்தை வழங்குவது என அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், அதற்கு பொதுமக்களிடமிருந்து எதிர்ப்பு வந்ததையடுத்து, அரசின் முடிவு பரிசீலனை செய்வதாக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளது. முதல்வரின் முடிவு வரவேற்கத்தக்கதாகும். 
மேலும் மாநிலத்தில் உள்ள மக்களுக்கு தூய குடிநீரை வழங்குவது அரசின் கடமையாகும். தூய குடிநீரை லிட்டருக்கு 10 பைசா என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், அதனை 25 பைசாவிற்கு உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகெளடா மேற்கொண்டுள்ள நடவடிக்கை முறையல்ல என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

SCROLL FOR NEXT