பெங்களூரு

மக்களவைத் தேர்தல்: இதுவரை 43 பேர் வேட்புமனு தாக்கல்

DIN

கர்நாடகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட இதுவரை 43 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பாளர்களை அறிவிப்பதில் அரசியல் கட்சிகள் திணறி வருகின்றன. 
கர்நாடகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்.18, 23 ஆகிய தேதிகளில் நடக்கவிருக்கின்றது. 14 தொகுதிகளுக்கு நடக்கும் முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கியது. ஹாசன், தென்கன்னடம், தும்கூரு, மண்டியா, மைசூரு, சாமராஜ்நகர், ஊரக பெங்களூரு, வடபெங்களூரு, மத்திய பெங்களூரு, தென்பெங்களூரு, சிக்பளாப்பூர் ஆகிய 11 தொகுதிகளில் மட்டும் வியாழக்கிழமை வரையில் 43 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 
ஹாசன் தொகுதியில் எச்.எம்.சந்திரேகெளடா, தென்கன்னடத்தில் சுப்ரீத்குமார் பூஜாரி, தும்கூரில் ஜி.நாகேந்திரா, ஹனுமந்தராயப்பா, சாயா ராஜாசங்கர், ஜி.எஸ்.பசவராஜ், மண்டியாவில் கெளட்லே சென்னப்பா, ஏ.சுமலதா, கே.உதயகுமார், மைசூரில் ஆயுப்கான், பி.எஸ்.சந்தியா, ஜே.ஜே.ஆனந்தா, ஸ்ரீனிவாசையா, பி.எஸ்.எடியூரப்பா, பி.டி.நிங்கப்பா, எம்.ஜே.சுரேஷ்கெளடா, எம்.லிங்கராஜூ, சாமராஜ்நகரில் எம்.பிரதீப்குமார், ஊரக பெங்களூருவில் கே.சிவராமண்ணா, எம்.மஞ்சுநாத், பி.எம்.மகேஷ், ஜே.டி.பிரகாஷ், வட பெங்களூரில் ஏ.எஸ்.பாஸ்கர், எல்.நாகராஜ், திம்மராஜகெளடா.
மத்திய பெங்களூரில் மல்லேகட்டிஸ்ரீதர், எம்.கே.பாஷா, எஸ்.ஆர்.வேணுகோபால், டாக்டர்.பிலிப் மரியான், நவாஸ்தில்பார், தென்பெங்களூருவில் ஆம்ப்ரோஸ் டி.மெல்லோ, நிதேஷ்கிருஷ்ணபொல்லேபள்ளி, ஜி.வெங்கடேஷ், சிக்பளாப்பூரில் கனகலட்சுமி, எல்.நாகராஜ் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 
இவர்களில் பெரும்பாலானோர் சுயேச்சைகளாகப் போட்டியிடுகிறார்கள். வேட்புமனு தாக்கல் மார்ச் 26-ஆம் தேதியுடன் நிறைவடையவிருக்கிறது. அதாவது வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்னும் 5 நாள்களே எஞ்சியுள்ளன. மண்டியா தொகுதியில் மறைந்த நடிகர் அம்பரீஷின் மனைவியும் நடிகையுமான சுமலதா, சுயேச்சையாக போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்திருக்கிறார். இவருக்கு எதிராக மஜத வேட்பாளராகப் போட்டியிடவுள்ள முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில், வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்வதாக இருந்தது. ஆனால், இது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
28 தொகுதிகளில் தனியாக போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் மாதிரிபட்டியலை தயாரித்து கட்சியின் தேர்தல்குழுவுக்கு அளித்துள்ளது. அதை பரிசீலித்துவரும் பாஜக மத்திய தேர்தல் குழு, அதற்கு ஒப்புதல் அளித்து வேட்பாளர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறது. கூட்டணி அமைத்து போட்டியிடும் மஜதவும், காங்கிரஸும் வேட்பாளர்களை அடையாளம் காண்பதில் குழம்பியுள்ளதால், வேட்பாளர் பட்டியலை வெளியிடமுடியாமல் திணறிவருகிறது. 
எனினும், இரண்டொரு நாள்களில் வேட்பாளர் பட்டியலை முக்கிய அரசியல் கட்சிகளான பாஜக, காங்கிரஸ், மஜத வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டால்தான் தேர்தல் களம் கர்நாடகத்தில் சூடுபிடிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

SCROLL FOR NEXT