பெங்களூரு

லஞ்சம்: உதவி அரசு வழக்குரைஞர் உள்பட 2 பேர் கைது

DIN

வழக்கு ஒன்றில் மேல் முறையீடு செய்வதற்கு லஞ்சம் பெற்றதாக உதவி அரசு வழக்குரைஞர் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம், திப்டூர் குற்றவியல் நீதிமன்றத்தில் உதவி அரசு வழக்குரைஞராகப் பணியாற்றி வருபவர் பூர்ணிமா. இவர் தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கை மேல்முறையீடு செய்வதற்காக ரூ. 40 ஆயிரம் லஞ்சம் கொடுக்குமாறு  கேட்டுள்ளார். அவர் ஏற்கெனவே ரூ. 20 ஆயிரம் கொடுத்திருந்த நிலையில், திங்கள்கிழமை மீண்டும் ரூ. 20 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அதை பூர்ணிமா சார்பில் நீதிமன்றத்தில் தட்டச்சராக பணியாற்றும் சரண்குமார் பெற்றுக் கொண்டுள்ளார். 
அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு படையினர் அவரையும், அவர் அளித்த தகவலின் பேரில் உதவி அரசு வழக்குரைஞர் பூர்ணிமாவையும் பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பூர்ணிமா, சரண்குமாரிடம் தும்கூரு லஞ்ச ஒழிப்பு படை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

SCROLL FOR NEXT