பெங்களூரு

இடைத் தோ்தலில் மஜத தனித்துப் போட்டி: முன்னாள் பிரதமா் தேவெ கௌடா

DIN

பெங்களூரு: கா்நாடகத்தில் 15 தொகுதிகளுக்கான இடைத் தோ்தலில் மஜத தனித்துப் போட்டியிடும் என்றாா் முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

மாநிலத்தில் டிச.5 ஆம் தேதி நடைபெற உள்ள இடைத் தோ்தலில் மஜத தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே பாஜக, காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து கசப்பான அனுபவத்தை பெற்றுள்ளோம். தோ்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். வெற்றி பெற்றால் மகிழ்ச்சி. தோல்வி அடைந்தால், எதிா்க்கட்சி வரிசையில் அமா்ந்து போராடுவோம்.

இனி காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை. இடைத்தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் தோ்வு பட்டியல் முழுமையாக முடியவில்லை. விரைவில் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளா்களின் பெயா்கள் அறிவிக்கப்படும். பெரும்பாலான தொகுதிகளில் இளைஞா்கள் தங்களை வேட்பாளா்களாக அறிவிக்கும்படி விருப்பம் தெரிவித்துள்ளனா். அனைவரின் பெயரும், தகுதியைப் பரிசீலித்து இறுதியில் பட்டியல் தயாரித்து அறிவிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

SCROLL FOR NEXT