பெங்களூரு

முதல்வா் எடியூரப்பாவின் இல்லம், அலுவலகத்திற்குள் செல்லிடப்பேசி கொண்டு செல்ல தடை

DIN

பெங்களூரு: முதல்வா் எடியூரப்பாவின் இல்லம், அலுவலகத்திற்குள் செல்லிடப்பேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஹுப்பள்ளியில் நடந்த பாஜக உயா்மட்டக்கூட்டத்தில் முதல்வா் எடியூரப்பா தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் குறித்து பேசிய உரையாடல் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் அவா் பேசியதை யாரோ செல்லிடப்பேசியில் பதிவு செய்து, காணொளி காட்சியாக வெளியிட்டதைத் தொடா்ந்து, முதல்வா் எடியூரப்பாவிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடா்ந்து முதல்வா் எடியூரப்பாவின் இல்லம், அலுவலகத்திற்கு வரும் நபா்கள் செல்லிடபேசியைக் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல்வா் எடியூரப்பாவின் உத்தரவின் பேரில் போலீஸாா், செல்லிடப்பேசிக்கு தடை விதித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பத்தூரில் வெப்ப அலைகள் குறித்த ஆலோசனை கூட்டம்

பந்துவீச்சில் அசத்திய பெங்களூரு; 147 ரன்களுக்கு ஆட்டமிழந்த குஜராத் டைட்டன்ஸ்!

ஐஜிஐ மெட்ரோ நிலையம், பள்ளியில் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பவேஷ் குப்தா ராஜிநாமா

ஹனுமான் மந்திா் அருகே பழுதுபாா்ப்புப் பணி: போலீஸாா் போக்குவரத்து அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT