பெங்களூரு

செப்.8-இல் பாவாணர் பாட்டரங்கம்

DIN

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை (செப்.8) ஐடிஐ தமிழ் மன்றத்தில் 192-ஆவது பாவாணர் பாட்டரங்கம் நடைபெற உள்ளது.
 இதுகுறித்து அம்மன்றத்தின் பாவாணர் பாட்டரங்கப் பொறுப்பாளர் இராம.இளங்கோவன் வெளியிட்ட அறிக்கை:
 பெங்களூரு தூரவாணிநகரில் உள்ள ஐடிஐ தமிழ் மன்றத்தில் செப்.8-ஆம் தேதி 192-ஆவது பாவாணர் பாட்டரங்கம் நடைபெறுகிறது. அன்று மாலை 3.30 மணியளவில் தொடங்கும் பாட்டரங்கத்திற்கு கண்ணதாசதாசன் தலைமை தாங்க, மன்றச்செயலாளர் கு.மாசிலாமணி வரவேற்று பேசுகிறார். பாட்டரங்கப் பொறுப்பாளர் இராம.இளங்கோவன் அறிமுக உரை ஆற்றுகிறார்.
 "பெண் விடுதலைப் பேணுவோம்' என்ற தலைப்பிலான பாட்டரங்கில் பாவலர்கள் பலர் பங்கு கொண்டு கவிதை பாடுகின்றனர். இதைத் தொடர்ந்து, உடனடி கவிதைப்போட்டி நடத்தப்பட்டு, சிறந்த கவிதைகளுக்கு புத்தகப் பரிசு, ஊக்கப் பரிசுகள் வழங்கப்படும். பிறந்த நாள் காணும் கவிஞர்கள் ப.மூர்த்தி, அமரன், பி.வி.ரத்தினம், சா.நடராஜன், வ.மலர்மன்னன், கே.ஜி.ராஜேந்திரபாபு, ஆ.லாரன்ஸ், மு.கருணாகரன், சுந்தர்ராஜன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்படும்.
 நிகழ்ச்சியில் மன்ற உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT