பெங்களூரு

குண்டுவெடிப்பு சம்பவம்: மும்பையைச் சேர்ந்தவரை பெங்களூருக்கு அழைத்து வந்து விசாரணை

DIN


குண்டுவெடிப்பு சம்பந்தமாக மும்பையைச் சேர்ந்த சந்தேகத்திற்கிடமளிக்கும் நபரை பெங்களூருக்கு அழைத்துவந்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
பெங்களூரில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் 2010ஆம் ஆண்டு செப்.17ஆம் தேதியும், சர்ச் தெருவில் 2014?ஆம் ஆண்டு டிச.28?ஆம் தேதி குண்டுவெடித்தன. இந்த இரு குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக  வழக்குகளை விசாரித்துவரும் பெங்களூரு போலீசார், மும்பையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்தேகத்திற்கிடமான பயங்கரவாதி ஜைனாலுதீனை விசாரிக்க முடிவுசெய்தனர்.  பெங்களூரு மாநகர காவல் கூடுதல் ஆணையர் வெங்கடேஷ் பிரசன்னா தலைமையிலான போலீஸார் மும்பைக்குச் சென்று, அங்கிருந்து ஜைனாலுதீனை வியாழக்கிழமை பெங்களூருக்கு அழைத்துவந்தனர்.  இவரை மாநகர குற்றவியல்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, ஜைனாலுதீனை 14 நாட்கள் விசாரிக்க குற்றவியல் போலீசாருக்கு அனுமதிஅளித்து நீதிபதி உத்தரவிட்டார்.  இந்த தகவலை உறுதிசெய்த வெங்கடேஷ் பிரசன்னா,புணேவில் உள்ள ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம்,  மும்பையில் நடந்த மூன்று குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஜைனாலுதீன் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார்.  இவருக்கும் பெங்களூரில் நடந்த குண்டுவெடிப்புக்கும் சம்பந்தமிருக்கிறதா? என்று விசாரணை நடத்தவிருக்கிறோம். குண்டுவெடிக்கப் பயன்படுத்திய வெடிபொருள்களை வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

யார் இந்த நடன மங்கை?

SCROLL FOR NEXT