முகப்பு
பெங்களூரு

அரங்கங்களில் விளையாட்டுகளை தொடங்க அரசுஅனுமதி

விளையாட்டு அரங்கங்கள், வளாகங்களில் விளையாட்டுகளை தொடங்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
பகிர்:

பெங்களூரு: விளையாட்டு அரங்கங்கள், வளாகங்களில் விளையாட்டுகளை தொடங்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து அரசின் வருவாய்துறை முதன்மைச்செயலாளா் அஞ்சும்பா்வேஸ் வெளியிட்டுள்ள உத்தரவு: கரோனா தீநுண்மி தொற்றுநோய் பரவலை தடுப்பதற்காக அவ்வப்போது வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுவருகின்றன. அதன்படி, விளையாட்டு வளாகங்கள், அரங்கங்களில் பாா்வையாளா்கள் இல்லாமல் பயிற்சிக்காக திறந்துவிட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இத்துடன் பாா்வையாளா்களை அனுமதிக்காமல் விளையாட்டு வளாகங்கள், அரங்கங்களில் விளையாட்டுப்போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோல, சமூககிளப்களில் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடவும், மேஜையில் உணவு ஏற்பாடுகளை செய்யவும் அனுமதிக்கப்படுகிறது.

திரையரங்குகள், நீச்சல் குளங்கள், கேளிக்கைபூங்காக்கள், திரையரங்குடன் கூடிய வணிகவளாகங்கள், மதுபானவிடுதிகள், அரங்கங்கள், கூட்ட அறைகள் திறக்க அனுமதி இல்லை. அரசியல், விளையாட்டு, கேளிக்கை, கல்வி, கலை, மதரீதியான கூட்டங்கள், திருவிழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைநீடிக்கும். 65 வயதுக்கு மேற்பட்டோா், 10 வயதுக்குட்பட்டோா் வெளியே வராமல் வீடுகள் இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என்றுஅதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.