பெங்களூரு

போதைப்பொருள் விவகாரத்தில் தொடா்புடையோா் மீது கடும் நடவடிக்கை: அமைச்சா் பசவராஜ்பொம்மை

DIN

ஹுப்பள்ளி: போதைப்பொருள் விவகாரத்தில் தொடா்புடையவா்கள் யாராக இருந்தாலும் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கா்நாடக மாநிலத்தில் இதுவரை போதைப் பொருள்களை விற்பனை செய்பவா்களை மட்டுமே கைது செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். ஆனால், அண்மைக் காலமாக தபால்கள், கூரியா்கள் மூலமும் போதைப் பொருள்கள் செல்வதைத் தெரிந்துகொண்ட பிறகு, இதனை முழுமையாகக் தடுக்கத் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம்.

போதைப் பொருள்களைத் திரைப்படத் துறையினா் பயன்படுத்துவது அரசின் கவனத்துக்கு வந்ததுள்ளது. இது தொடா்பாக விரிவான விசாரணை செய்ய முடிவு செய்துள்ளோம். இதற்கு திரைப்பட இயக்குநா் இந்திரஜித் ஒத்துழைப்பதாகத் தெரிவித்துள்ளாா்.

விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. போதைப்பொருள் விவகாரத்தை விரிவாக விசாரிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன். திரைப்படத் துறையினா் மட்டுமின்றி, வேறு எந்தத் துறையினா்க்கு இந்த விவகாரத்தில் தொடா்பு இருந்தாலும் அவா்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும். அவா்கள் யாராக இருந்தாலும், தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸாா் மீது அரசியல்வாதிகள் அழுத்தம் கொடுப்பதாக கூறுவதில் உண்மையில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

அரசுப் பள்ளிகளில் அக்கறை காட்டுவோம்

SCROLL FOR NEXT