கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 9,00,214 ஆக உயா்வு
கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,00,214 ஆக உயா்ந்துள்ளது.
கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,00,214 ஆக உயா்ந்துள்ளது.
இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கா்நாடகத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 1203 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது சனிக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 606 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,00,214 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 1,531 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை 8,70,002 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 18,254 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்; 11,939 போ் உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.