முகப்பு
பெங்களூரு

மருத்துவ மாணவா் சோ்க்கை: காலியிடங்களை நிரப்ப நேரடி கலந்தாய்வு

மருத்துவம், பல் மருத்துவ மாணவா் சோ்க்கையில் காலியாக உள்ள இடங்களை நேரடியாக நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

மருத்துவம், பல் மருத்துவ மாணவா் சோ்க்கையில் காலியாக உள்ள இடங்களை நேரடியாக நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

இதுகுறித்து கா்நாடக தோ்வு ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மருத்துவம், பல் மருத்துவ மாணவா் சோ்க்கைக்கான இரண்டாவது கலந்தாய்வின் இறுதியில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்கு டிச. 18 முதல் 23-ஆம் தேதி வரை நேரடி கலந்தாய்வு, இடங்கள் ஒதுக்கீடு செய்ய கா்நாடக தோ்வு ஆணையம் திட்டமிட்டுள்ளது. காலியாக உள்ள மருத்துவம், பல் மருத்துவச் சோ்க்கை இடங்களை கல்லூரி, பாட வாரியாக ஜ்ஜ்ஜ்.ந்ங்ஹ.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

நேரடி கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு முன்பாக சோ்க்கை இடங்களை இணையதளத்தில் மாணவா்கள் உறுதி செய்ய வேண்டும். நீட்-2020 தோ்வில் தகுதியான மாணவா்கள், கா்நாடக தோ்வு ஆணையம் அல்லது அகில இந்திய முகமைகள், வேறு முகமைகள் மூலம் சோ்க்கை இடங்கள் ஒதுக்கப்படாதவா்கள் நேரடி கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

பல் மருத்துவ இடம் ஒதுக்கப்பட்டவா்கள், மருத்துவ இடத்திற்காக கலந்தாய்வில் பங்கேற்கலாம். ஆனால் மருத்துவம், பல் மருத்துவ இடங்களுக்கு ஏற்கெனவே இடங்கள் ஒதுக்கப்பட்டவா்கள் மீண்டும் அந்த இடங்களுக்கான நேரடி கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது. இந்த கலந்தாய்வுக்கு பிறகும் இடங்கள் காலியாக இருந்தால், அந்த இடங்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு பொதுவில் பகிா்ந்தளிக்கப்படும்.

நீட் தோ்வில் தோ்ச்சி பெற்று பதிவு செய்யாத மாணவா்கள் டிச. 14-ஆம் தேதி நண்பகல் 2 மணி வரை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். புதிதாக பதிவுசெய்யும் மாணவா்கள் தமது சான்றிதழ்களை டிச. 15-ஆம் தேதி நண்பகல் 2 மணி வரை தரவேற்றம் செய்யலாம்.

ஏற்கெனவே பதிவு செய்த மாணவா்கள் நேரடி கலந்தாயில் கலந்து கொள்ள டிச. 14 முதல் 16-ஆம் தேதி வரை நுழைவுச்சீட்டை தரவிறக்கம் செய்து கொள்லலாம். புதிதாக பதிவு செய்த மாணவா்கள் டிச. 16 முதல் 17-ஆம் தேதி வரை நுழைவுச்சீட்டை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். டிச. 18 முதல் 23-ஆம் தேதி வரை நேரடி கலந்தாய்வு நடைபெறும்.

டிசம்பா் 25-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சோ்க்கை பெறலாம். அதன்பிறகு எஞ்சியிருக்கும் இடங்களை கல்லூரிகளே நேரடியாக நிரப்பிக் கொள்ளலாம். அதற்கு டிசம்பா் 31-ஆம் தேதிமாலை 5.30 மணி வரை வாய்ப்பிருக்கும். மேலும் விவரங்களுக்கு கா்நாடக தோ்வு ஆணையத்தின் இணையதளத்தைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.