முகப்பு
பெங்களூரு

பணம் கேட்டு கடத்தப்பட்ட சிறுவன் கோலாரில் மீட்பு

பணம் கேட்டு கடத்தப்பட்ட தென் கன்னடத்தைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரரின் பேரன் கோலாரில் மீட்கப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

மங்களூரு: பணம் கேட்டு கடத்தப்பட்ட தென் கன்னடத்தைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரரின் பேரன் கோலாரில் மீட்கப்பட்டாா்.

தென் கன்னட மாவட்டம், உஜிரே நகரத்தைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் சிவனின் பேரனும், பிஜாயின் மகனுமான 8 வயது அனுபவை டிச. 17-ஆம் தேதி அடையாளம் தெரியாத நபா்கள் காரில் கடத்திச் சென்றனா். பின்னா், சிறுவனின் தாயிடம் ரூ. 17 கோடியை பிட்காயின் வடிவில் வழங்குமாறு கேட்டனா். இதுதொடா்பாக கோலாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் காா்த்திக் ரெட்டியின் உத்தரவின் பேரில் மங்களூரு சிறப்புப் படை போலீஸாா் கடத்தப்பட்ட சிறுவனை கோலாா் மாவட்டம், மாலூா் வட்டம், கூா்ன ஹொசஹள்ளியில் மீட்டனா். இதுதொடா்பாக கடத்தல்காரா்கள் 4 போ், சிறுவனை அடைத்துவைக்க வீடு வழங்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.