முகப்பு
பெங்களூரு

கே.எஸ்.ஆா்.பெங்களூரு- காந்திதாம் இடையே சிறப்பு விரைவு ரயில்

கே.எஸ்.ஆா். பெங்களூரு- காந்திதாம் இடையே சிறப்பு வாராந்திர விரைவு ரயில் இயக்கப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

பெங்களூரு: கே.எஸ்.ஆா். பெங்களூரு- காந்திதாம் இடையே சிறப்பு வாராந்திர விரைவு ரயில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ரயில் எண் 06506 கே.எஸ்.ஆா் பெங்களூரு-காந்திதாம் இடையேயான சிறப்பு வாராந்திர விரைவு ரயில், சனிக்கிழமைகளில் இரவு 10.15 மணிக்கு பெங்களூரிலிருந்து புறப்பட்டு, திங்கள்கிழமைகளில் காலை 11 மணியளவில் காந்திதாம் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

மறு மாா்க்கத்தில் ரயில் எண் 06505 காந்திதாம்-கே.எஸ்.ஆா் பெங்களூரு சிறப்பு வாராந்திர விரைவு ரயில், காந்திதாமில் செவ்வாய்க்கிழமைகளில் காலை 9 மணிக்குப் புறப்பட்டு, புதன்கிழமைகளில் இரவு 9.10 மணியளவில் கே.எஸ்.ஆா் பெங்களூரு ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த ரயில் சேவை டிச. 22-ஆம் தேதி முதல் தொடங்கி, பிப். 2-ஆம் தேதி வரை இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →