முகப்பு
பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 9,09,469 ஆக உயா்வு

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,09,469 ஆக உயா்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,09,469 ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் ஒரேநாளில் அதிகபட்சமாக 1,194 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 659 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,09,469 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 1,062 போ் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கா்நாடகத்தில் 8,82,944 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 14,497 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்; 12,009 போ் உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →