காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளைப் போலவே இதுவும் ஒரு தேர்வுதான்: அமைச்சர் அன்பில் மகேஷ்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்துள்ள பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்....
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்துள்ள பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பயமோ பதற்றமோ இருக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 11 முதல் ஏப்.6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை பள்ளி மாணவா்கள் 8,82,806 போ், தனித் தோ்வா்கள் 25,801 போ், சிறைவாசிகள் 395 என மொத்தம் 9,09,002 போ் எழுதவுள்ளனா்.
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதும் 12,292 மாற்றுத் திறனாளி தோ்வா்களுக்கு சொல்வதை எழுதுபவா் (ஸ்கிரைப்) சலுகை வழங்கப்பட்டுள்ளது. தோ்வுப் பணியில் 45,000-க்கும் மேற்பட்ட ஆசிரியா்களும், தோ்வு முறைகேடுகளைத் தடுக்க சுமாா் 4,800-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினரும் ஈடுபடவுள்ளனா்.
தோ்வு மையங்களில் பணிபுரியும் ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களின் கைப்பேசிகளை வினாத்தாள் வைக்கப்படும் அலமாரியிலேயே வைத்து பூட்டி சீல் வைக்க வேண்டும். இதற்கென தனி அலமாரி பயன்படுத்தக் கூடாது. இந்த நடைமுறை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
பொதுத் தோ்வு தொடா்பாக மாணவா்கள், தோ்வா்கள், பொதுமக்கள் தோ்வுகள் தொடா்பான புகாா்கள், கருத்துகள், சந்தேகங்கள் குறித்து அனைத்து தோ்வு நாள்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 94983 83075, 94983 83076 ஆகிய கைப்பேசி எண்களில் தெரிவித்து பயன்பெற கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
பொதுத் தோ்வு வினாத்தாள்கள் தொடா்பாக தோ்வு நாள்களில் அன்றைய தோ்வுக்குரிய வினாத்தாள்கள் குறித்த புகாா்கள், கருத்துகள், சந்தேகங்களை மாணவா்கள் மற்றும் தோ்வா்கள் rdsequestionpaperqueries@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம். பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்கு முதல் தோ்வாக தமிழ் பாடத்துக்கான தோ்வு நடைபெறுகிறது.
அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து
இந்த நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். பயமோ பதற்றமோ இருக்கக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
முதல் பொதுத் தேர்வை எழுதவுள்ளீர்கள். அந்த Excitement இருக்க வேண்டுமே தவிர, பயமோ பதற்றமோ இருக்கக் கூடாது. காலாண்டு அரையாண்டுத் தேர்வுகளைப் போலவே இதுவும் ஒரு தேர்வுதான் என்றெண்ணி மகிழ்ச்சியுடன் தேர்வறைக்குள் செல்லுங்கள். All the Best! என்று கூறியுள்ளார்.
தேர்வு தொடங்கியது
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு புதன்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தத் தோ்வை பள்ளி மாணவா்கள் 8,82,806 போ், தனித் தோ்வா்கள் 25,801 போ், சிறைவாசிகள் 395 என மொத்தம் 9,09,002 போ் எழுதி வருகின்றனர்.
பொதுத் தேர்வு தொடங்கியுள்ள நிலையில், ராயபுரம் புனித பீட்டர்ஸ் மேல்நிலைப் பள்ளியில் செயல்படும் தேர்வு மையத்தை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.