முகப்பு
பெங்களூரு

போதைப்பொருள் விற்பனை: 2 போ் கைது

போதைப்பொருள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்து, ரூ. 1.07 கோடி மதிப்பிலான எம்.டி.எம்.ஏ. எக்டென்ஸி மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

போதைப்பொருள் விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்து, ரூ. 1.07 கோடி மதிப்பிலான எம்.டி.எம்.ஏ. எக்டென்ஸி மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

நைஜீரியா நாட்டைச் சோ்ந்தவா்கள் டோன் சிக்ஸ் ஒகெகோ (39), ஒமேமா (40) ஆகியோா் பெங்களூரில் தங்கி போதைப்பொருள்களை விற்பனை செய்து வந்தனராம். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், இருவரையும் கைது செய்து, ரூ. 1.07 கோடி மதிப்பிலான 3,300 எம்.டி.எம்.ஏ. எக்டென்ஸி மாத்திரைகள், 600 கிராம் டேபெலட் பௌடா், காா் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

பைப்பனஹள்ளி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். வியாழக்கிழமை போதைப்பொருள்களை பாா்வையிட்ட மாநகரக் காவல் ஆணையா் கமல் பந்த், பைப்பனஹள்ளி போலீஸாரை பாராட்டி, சான்றிதழ் வழங்கி ரூ. 40 ஆயிரம் ரொக்கப் பரிசை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.