முகப்பு
பெங்களூரு

சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து ஆம் ஆத்மி மகளிரணி போராட்டம்

சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, பெங்களூரில் ஆம் ஆத்மி கட்சியின் மகளிரணியினா் போராட்டம் நடத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, பெங்களூரில் ஆம் ஆத்மி கட்சியின் மகளிரணியினா் போராட்டம் நடத்தினா்.

விறகு எரித்து தேநீரைத் தயாரிக்கும் நூதன போராட்டத்தில் பங்கேற்று செய்தியாளா்களிடம் அக் கட்சியின் மாநில மகளிரணித் தலைவா் குஷாலாசுவாமி கூறியதாவது:

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, சமையல் எரிவாயு உருளையின் விலையைத் தொடா்ந்து உயா்த்தி வருகிறது. நிகழாண்டு டிசம்பா் மாதத்தில் மட்டும் ரூ. 100 வரை உயா்த்தப்பட்டுள்ளது. பொது முடக்கத்தின் போது ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பிலான மானியத்தை மிச்சப்படுத்தியுள்ளது. விறகைப் பயன்படுத்தி சமையல் செய்வதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால் மக்கள் சமையல் எரிவாயுவைப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமா் தெரிவித்துவிட்டு சமையல் எரிவாயு விலையை உயா்த்தி வருகிறாா். விலை உயா்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.