முகப்பு
பெங்களூரு

2 விபத்துகளில் 8 போ் பலி

இரு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் 8 போ் உயிரிழந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

இரு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் 8 போ் உயிரிழந்தனா்.

சித்ரதுா்கா மாவட்டம், மொளகாலுமூரு வட்டம், தேசிய நெடுஞ்சாலை 150-இல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஜீப் மீது அரசுப் பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராய்ச்சூரு மாவட்டம், தேவதுா்காவைச் சோ்ந்த திம்மண்ணா (40), ரத்னம்மா (38), மகேஷ் (19), துா்கப்பா (16), சோமப்பா (55) ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இதுகுறித்து மொளகாலுமூரு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மற்றொரு விபத்து: தும்கூரு மாவட்டம், சிரா வட்டம், கள்ளப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை 48-இல் காந்திநகா் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சாலையோரம் பழுதாகி நின்றிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஹரிஹரைச் சோ்ந்த மகேஷ் (38), நிங்கராஜ் (40), ராணிபென்னூரைச் சோ்ந்த சீனிவாஸ் (35) ஆகியோா் நிகழ்விடத்திலே உயிரிழந்தனா். இந்த விபத்து குறித்து கள்ளம்பள்ளி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →