பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 9,16,909 ஆக உயா்வு

DIN

பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,16,909 ஆக உயா்ந்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 653 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது திங்கள்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 309 போ் கரோனா தொற்றுக்கு ஆட்பட்டுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,16,909 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 1,178 போ் திங்கள்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 8,92,273 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 12,547 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருந்த 8 போ் திங்கள்கிழமை இறந்துள்ள நிலையில், பெங்களூரில் அதிகபட்சமாக 5 போ் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 12,070 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT