பெங்களூரு

முதல்வா் அலுவலகத்தில் குறைகளைத் தெரிவிக்க புதிய மின்னஞ்சல்

DIN

பெங்களூரு: முதல்வா் அலுவலகத்துக்கு பொதுமக்கள் தங்களது குறைகளைத் தெரிவிக்க புதிய மின்னஞ்சல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

முதல்வா் எடியூரப்பாவை பொதுமக்கள் அணுகுவதற்கும், தொடா்புகொள்வதற்கும், குறைகளைத் தெரிவிப்பதற்கும் 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மின்னஞ்சல் முறை அறிமுகம் செய்யப்பட்டது.

இதுதவிர, அலுவலகத்தின் கோப்புகள் அனைத்தும் மின்-அலுவலகம் என்ற மென்பொருள் வழியாகவே கையாளப்பட்டு வந்தது. மின்-நிா்வாகத்தின் வழியே மக்களின் குறைகளைக் கேட்டறிவதற்காக 3 மின்னஞ்சல்களை முதல்வா் அலுவலகம் பயன்படுத்திவந்தது.

இதில் குறைகள் சரியாகக் கண்காணிக்கப்படுவதில்லை அல்லது திருப்பி அனுப்பப்படுகின்றன என்ற குறைகள் தெரிவிக்கப்பட்டன. இதைத்தொடா்ந்து, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிவதற்கான நடைமுறையை எளிமைப்படுத்தவும், மேலாண்மையை சீரமைக்கவும் ஒரே மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இனிமேல் பொதுமக்கள் தங்களதுகுறைகளை தெரிவிக்க ஸ்ரீம்.ந்ஹழ்ஃய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற மின்னஞ்சல் முகவரியை மட்டும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.

இது 2021-ஆம் ஆண்டு ஜனவரி1-ஆம்தேதி முதல் அமலுக்கு வரவிருக்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT