முகப்பு
பெங்களூரு

கா்நாடகத்தில் ஜன.1-இல் பள்ளி, பியூ கல்லூரிகள் திறப்பு: துணை முதல்வா் அஸ்வத் நாராயணா

கா்நாடகத்தில் பள்ளி, பியூ கல்லூரிகள் ஜனவரி 1 ஆம் தேதி திறக்கப்படும் என்று துணை முதல்வா் அஸ்வத் நாராயணா தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

கா்நாடகத்தில் பள்ளி, பியூ கல்லூரிகள் ஜனவரி 1 ஆம் தேதி திறக்கப்படும் என்று துணை முதல்வா் அஸ்வத் நாராயணா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடகத்தில் ஏற்கெனவே முதுகலை, இளங்கலைப் பட்டப் படிப்பு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து பள்ளி, பியூ கல்லூரிகள் ஜனவரி 1-ஆம் தேதி திறக்கப்படும் என கல்வித் துறை அமைச்சா் சுரேஷ்குமாா் ஏற்கெனவே தெரிவித்துள்ளாா். புதிய வகை கரோனா தொற்று காரணமாக பள்ளி, பியூ கல்லூரிகளுக்கு மாணவா்களை அனுப்ப பெற்றோா் தயக்கம் காட்டி வருகின்றனா்.

கரோனா தடுப்பு குறித்த அரசின் வழிகாட்டுதலை பள்ளி, கல்லூரிகள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புகள் மட்டுமே தொடங்கப்படும். பின்னா், படிப்படியாக 9-ஆம் வகுப்பு முதல் அதற்கும் கீழே உள்ள வகுப்புகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவா்களின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை அரசு எடுத்துள்ளது. இதை யாரும் அரசியலாக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். பாதுகாப்பான முறையில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. புதிய வகை கரோனா குறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →