முகப்பு
திருப்பதி

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.41 கோடி!

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.41 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Updated On : 11 மார்ச், 2026 at 5:05 AM
திருமலை ஏழுமலையான் கோயில் - கோப்புப் படம்
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.41 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 15 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனம், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

இதற்கிடையே, திங்கள்கிழமை முழுவதும் 72, 526 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 26,662 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

Advertisement

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.41 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.