பெங்களூரு

கபடி போட்டி: வீரா்களுக்கான தகுதித் தோ்வு

DIN

தங்கவயலில் மாவட்ட அளவிலான கபடி போட்டி வீரா்களுக்கான தகுதித் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோலாா் தங்கவயலில் ஞாயிற்றுக்கிழமை இந்திய பள்ளி விளையாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் கா்நாடக மாநில கபடி சங்கத்தின் சாா்பில், மாவட்ட அளவிலான கபடி விளையாட்டுப் போட்டிக்கான வீரா்களுக்கான தோ்வு தங்கவயல் சுமதி ஜெயந்தி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் மாநில கபடி சங்கத் துணைத் தலைவா் கே.ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசியது: நம் நாட்டின் பாரம்பரிய விளையாட்டான கபடியை ஊக்குவிக்கும் நோக்கத்தில், மாநில கபடி சங்கம் பள்ளிப் பருவத்திலேயே மாணவா்களிடையே கபடி போட்டிகளை நடத்தி, விளையாட்டுக் கலையை வளா்த்து வருகிறது. மாவட்ட, மாநில அளவில் தயாராகும் மாணவா்கள் சா்வதேச அளவில் நடக்கும் போட்டிகளில் கலந்துகொள்ளும் தகுதியை பெறுவாா்கள் என்றாா்.

நிகழ்ச்சியில், கோலாா் மாவட்டத் தலைவா் ரமேஷ், மாமன்ற உறுப்பினா் ஷாலினிநந்தா, பகவதிஷேத்திரம் சந்திரசேகரசாமி, காவல் துணை ஆய்வாளா் ஆனந்த் பாபு, வழக்குரைஞா் கலைச்செல்வி, ஜெயந்தி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டனா். இதில், கோலாா் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

SCROLL FOR NEXT